வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 21 செப்டம்பர் 2016 (17:25 IST)

பயன்படுத்தப்பட்ட மனைவி விற்பனைக்கு: விளம்பரம் செய்த கணவன்

இங்கிலாந்தில் மனைவியின் தொல்லை தாங்க முடியாமல், கணவன் ஒருவர் மனைவியை விற்பனை செய்ய முடிவு செய்தார். அதன்படி இபே இணையதளத்தில் பயன்படுத்தப்பட்ட மனைவி என்று விளம்பரம் செய்துள்ளார்.


 

 
இங்கிலாந்து லண்டனை சேர்ந்த சைமன் ஓ கேன்(33) மற்றும் அவரது மனைவி லியாண்ட்ரா(27) ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் சைமன் அவரது மனையை இபே மூலம் விற்க முடிவு செய்தார்.
 
பயன்படுத்தப்பட்ட மனைவி என்ற தலைப்பில் மனைவியின் புகைப்படத்தை பதிவு செய்து அதன்கீழ் பொருளை வாங்கிய பிறகு கண்டிப்பாக திருப்பி தர இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். 
 
இந்த விளம்பரத்துக்கு மொத்தம் 57 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு நபர் அதிக தொகையாக 65 ஆயிரம் பவுண்டுக்கு ஏலம் கேட்டுள்ளார்.