Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சிலந்தியை கொல்ல வீட்டை எரித்த விநோதம்...

Last Updated: புதன், 10 ஜனவரி 2018 (16:06 IST)
அமெரிக்காவில் வீட்டில் இருந்த சிலந்தியை கொல்ல வீட்டியே எரித்த்துள்ளார் ஒருவர். இவரது செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதனால் அங்கு பரபரப்பும் கூடியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவை சேர்ந்த ஒருவரின் வீட்டில் பெரிய சிலந்தி ஒன்று இருந்துள்ளது. இவரது வீடு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்துள்ளது.
அந்த சிலந்தியை கொள்ள பல முறை முயற்சித்துள்ளார் இவர். ஆனாலும், அந்த சிலந்தி சிக்காததால் பர்னர் மூலம் அதனை தீயிட்டு எரிக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த ஸ்கீரின் தீப்பற்றிக்கொண்டது.

இந்த தீ வீட்டில் இருந்த பொருட்கள் மீது வேகமாக பரவியதால் வீடு முழுவதும் எரிந்தது. தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர்.
மேலும், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருந்த அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :