வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 8 அக்டோபர் 2015 (12:57 IST)

இணைய பயன்பாட்டால் இளைஞர்களை பாதிக்கும் உயர் ரத்த அழுத்தம்

ஒரு சமீபத்திய ஆய்வின்படி, அதிக நேரம் இணையத்தை பயன்படுத்தும் இளம் வயதினருக்கு உயர் ரத்த அழுத்தம் வரும் ஆபத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் டெட்ரியட்டில் உள்ள ஹென்றி ஃபோர்ட் மருத்துவமனை நடத்திய ஆய்வில் ஒரு வாரத்திற்கு 14 மணி நேரத்திற்கு அதிகமாக இணையம் பயன்படுத்தும் இளைஞர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். அதிக நேரம் இணையம் பயன்படுத்தும் 134 இளைஞர்களில் 26 பேர் உயர் ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்த ஆய்வு கூறுகிறது.

அதிக நேரம் இணையத்துடன் இணைந்துள்ள இவர்கள் உயர் ரத்த அழுத்தம் மட்டும் இல்லாமல் இணையத்திற்கு அடிமையாகுதல், கவலை, மன அழுத்தம், உடல் பருமன், சமூக தனிமை போன்ற பிற சுகாதார அபாயங்களுக்கு உள்ளாகின்றனர்.

முன்னணி எழுத்தாளர் ஆண்ட்ரியா கேசிடி-புஷ்ரோ இளம் வயதினர் மற்றும் பெற்றோர்கள் இணையத்தை மிதமாக பயன்படுத்த அறிவுறுத்துகிறார். இணைய பயன்பாடு நம் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கலாம் ஆனால் இணையம் நம்மை பயன்படுத்த கூடாது, என்று அவர் கூறுகிறார். "எங்கள் ஆய்வில், இளம் வயதினர் சராசரியாக வாரத்திற்கு 25 மணி நேரம் இணையத்தை பயன்படுத்துகின்றனர் என அவர் தெரிவித்தார்.

மேலும் கூறிய அவர் இளைஞர்கள் வழக்கமான தங்கள் கணினி மற்றும் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு ஓய்வு கொடுத்து உடல் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறும், பெற்றோர்கள் குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கட்டுப்படுத்துமாறும் கூறியுள்ளார்.

ஒரு நாளுக்கு 2 மணி நேரம் ஆரோகியமான இணைய பயன்பாடு என்கிறது அந்த ஆய்வு.