1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 ஜனவரி 2018 (15:41 IST)

வர இருக்கும் அதிபயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 9 புள்ளிகள்?

2018-ஆம் ஆண்டு தொடங்கி மூன்று நாட்கள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்ற கணிப்புகள் வர தொடங்கியுள்ளன. அதில் பூமிக்கு மிகப்பெரிய ஆபத்து காத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
 
புவியியல் ஆய்வாளர்கள் இந்த ஆண்டு எப்படி இருக்கப்போகிறது என ஆராய்ச்சி செய்ததில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது. அதில் பூமியின் சுழற்சி வேகம் குறைந்து, மைய விலக்கு விசை குறைந்து பூமிக்கோளின் பூமத்திய ரேகை இறுக்கமாகும், இதனால் பூமித்தட்டுகள் ஒன்றோடு ஒன்று மோதி உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இதனால் இந்த ஆண்டு அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் வரை அதிபயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது போன்ற பல நிலநடுக்கங்கள் இந்த வருடம் உருவாக உள்ளதாம். இதுபோன்று ரிக்டர் அளவில் 9 புள்ளிகள் வரை நிலநடுக்கம் வந்தால், அந்த பகுதியே சில நிமிடங்களில் தரைமட்டமாகிவிடும்.
 
இந்த நிலநடுக்கங்கள் மேற்கு அமெரிக்கா, தெற்கு அமெரிக்கா, தெற்கு ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றில் வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எரிமலைகளும் வெடித்து சிதறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.