Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஹெட்போன் வெடித்து இளம்பெண்ணின் முகம் சேதம்! விமான பயணத்தில் விபரீதம்


sivalingam| Last Modified வியாழன், 16 மார்ச் 2017 (06:29 IST)
ஹெட்பொனில் பாடல் கேட்டுக்கொண்டே விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் அந்த ஹெட்போனின் பேட்டரி திடீரென வெடித்ததால் ஏற்பட்ட விபத்து காரணமாக அவரது முகம் சேதம் அடைந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

 


சீனத்தலைநகர் பீஜிங்கில் இருந்து ஆஸ்திரேலிய நாட்டில் உள்ள மெல்போர்ன் நகருக்கு விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவர் பயணம் செய்யும்போது ‘ஹெட்போனை பொருத்தி ஆர்வமாக பாடல்களை ரசித்து தூங்கிவ்ட்டார்.
திடீரென ஏதோ ஒரு பொருள் வெடித்தது போன்று சத்தம் கேட்கவே அலறியடித்து கண்விழித்துப் பார்த்தபோது அவர் தனது முகத்தில் நெருப்பு எரிவது போன்று உணர்ந்தார். உடனடியாக தலையில் இருந்து ஹெட்போனை கழற்றி வீசி எறிந்தார். இந்த விபத்தால் அவரது முகம் பலத்த சேதமடைந்தது. மேலும் ஹெட்போன் வெடிப்பு காரணமாக விமானம் புகையால் மூழ்கியதால் சக பயணிகள் அனைவரும் இருமிக்கொண்டே பயணம்

 விமான பயணத்தின்போது ‘ஹெட்போன்’ சாதனம் அணிந்து பாடல் கேட்டு வந்தபோது, அது வெடித்து ஒருவர் காயம் அடைந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் இப்படி ஒரு சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பேட்டரியால் இயங்குகிற மின்னணு சாதனங்களை விமான பயணத்தின்போது பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்து வருகிறோம் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதில் மேலும் படிக்கவும் :