Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கண்ட இடங்களில் கை வைத்தார்; நடிகைகள் புகார் ; நடிகருக்கு சிக்கல்

வியாழன், 12 அக்டோபர் 2017 (15:56 IST)

Widgets Magazine

ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் மீது ஹாலிவுட் நடிகைகள் பலரும் புகார் கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
சமீபத்தில் பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான ஹார்வே வெயின்ஸ்டின் மீது நடிகை ஏஞ்சலினா ஜோலி உட்பட பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்தனர். இதனால், அவரை பலரும் ஒதுக்க தொடங்கியுள்ளனர். அவர் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அதில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 லிருந்து 25 வருடங்கள் வரை ஆயுள் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.
 
இந்நிலையில், ஹாலிவுட் நடிகர் பென் அஃப்லெக் மீதும் பாலியல் புகார் எழுந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மார்பில் அவர் கை வைத்தார் என பிரபல நடிகை ஹிலாரி பர்டன் தற்போது ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 


 

 
அவரைத் தொடர்ந்து, அவரிடம் பென் அஃப்லெக் மன்னிப்பு கேட்டுள்ளார். இந்நிலையில், ஹாலிவுட் படங்களில் மேக்கப் கலைஞராக பணிபுரியும் அன்னாமேரி டெண்ட்லர் என்பவரும் அவர் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.


 

 
2014ம் ஆண்டு நடந்த ஒரு பார்ட்டியில் பென் என்னுடைய பின்புறத்தில் கையை வைத்து அழுத்தினார். அதற்கான அவர் என்னிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என நான் விரும்புகிறேன் என தனது டிவிட்டர் பக்கத்தில் டிவிட் செய்துள்ளார். மேலும், பல பெண்களை போல், அந்த சூழ்நிலையில் நான் எதுவும் கூறவில்லை. ஆனால், அவரை நேரில் பார்த்தால் அவரிடம் நிறைய கேட்க வேண்டும் என தான் நினைத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
ஹாலிவுட் பெண் கலைஞர்களின் தொடர் பாலியல் புகார் நடிகர் பென் அஃப்லெக்கிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஆருஷி கொலை வழக்கில் திடீர் திருப்பம்: பெற்றோர் விடுதலை

கடந்த 2008ஆம் ஆண்டு டெல்லி அருகே உள்ள பல்டாக்டர்கள் தம்பதியர்களின் மகள் 14 வயது சிறுமி ...

news

ஆப்பிரிக்காவில் இரத்தக்காட்டேறியால் ஊரடங்குச் சட்டம்

தென்கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள மலாவியில் இரத்தக்காட்டேறியால் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 ...

news

பெண்கள் கழிவறைக்குள் நுழைந்த ராகுல்காந்தி:

காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி தற்போது குஜராத் மாநிலத்தில் தீவிர ...

news

6 மாதத்தில் பிறந்த குழந்தை; 350 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் போராட்டம்: நெகிழ்ச்சி சம்பவம்!!

கேரளாவில் 6 மாதத்தில் பிறந்த குழந்தையை காப்பாற்ற 350 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராடிய ...

Widgets Magazine Widgets Magazine