Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கிரீஸ் நாட்டில் வரலாறு காணாத நிலநடுக்கம். சீட்டுக்கட்டு போல் சரிந்த கட்டிடங்கள்


sivalingam| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (05:16 IST)
கிரீஸ் நாட்டில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சீட்டுக்கட்டுக்கள் போல், ஏராளமான கட்டடங்கள் சரிந்தன. இதனால் நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 


கிரீஸ் நாட்டில் உள்ள லெஸ்போஸ் என்ற அழகிய கடற்கரை நகரம் ப்ளோமாரி என்ற நகரத்தின் தெற்கில் இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நகரில் நேற்று மாலை திடீரென பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் நீடித்த நிலநடுக்கத்தால், ஏராளமான கட்டடங்கள் சரிந்து விழுந்தன.

நிலநடுக்கத்தை உணர்ந்த அந்நாட்டு பொதுமக்கள் அனைவரும் அச்சத்துடன் தங்கள் குழந்தைகளுடன் வீடுகளை விட்டு வெளியேறி, வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்த நிலநடுக்கம் காரணமாக உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றாலும் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவிப்பதாகவும் அவர்கள் தற்காலிகமாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் கிரீஸ் அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கம் துருக்கி, இஸ்தான்புல், ஏதென்சிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :