1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 3 அக்டோபர் 2016 (12:47 IST)

கன்னித்தன்மை அவசியமா? அதிர்ச்சியில் கல்லூரி பெண்கள்

கன்னிகைகளுக்கு மட்டுமே அனுமதி, பெண்கள் கல்லூரியில் சேர்வதற்கு கன்னித்தன்மை சோதனை அவசியம் என்று எகிப்து சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார்.

 


 
எகிப்து நாட்டில் திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்து கொள்வதற்கு அனுமதி கிடையாது. அண்மையில், அந்நாட்டு சட்டமன்ற உறுப்பினர் அஜினா, கல்லூரியில் சேர விரும்பும் பெண்கள் அவர்களது கன்னித்தன்மை குறித்து தரப்படும் மருத்துவ பரிசோதனையை சரிபார்த்த பின்னர்தான் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார்.
 
இத்தகைய நடவடிக்கை மூலம் நாட்டில் அதிக அளவில் நடைப்பெறும் ரகசிய திருமணத்தை குறைக்க முடியும் என்றார். திருமணத்துக்கு முன்பு உடலுறவு வைத்து கொள்ள முடியாது என்பதால் ரகசிய திருமணம் அதிக அளவில் நடைப்பெற்று வருகிறது.
 
இவருடைய இந்த சர்ச்சை கருத்துக்கு எகிப்து நாட்டு மக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.