ஒரே நாளில் ரயில், கார் என மாறி மாறி கற்பழிக்கப்பட்ட 15 வயது சிறுமி!

ஒரே நாளில் ரயில், கார் என மாறி மாறி கற்பழிக்கப்பட்ட 15 வயது சிறுமி!


Caston| Last Modified வெள்ளி, 28 ஜூலை 2017 (12:05 IST)
பிரிட்டனில் 15 வயது சிறுமி ஒருவர் ஒரே நாளில் வெவ்வேறு நபர்களால் ரயிலிலும், காரிலும் மாறி மாறி கற்பழிக்கப்பட்ட கொடூர சம்பவம் நடந்துள்ளது.

 
 
பிரிட்டன் பர்மிங்ஹாமில் உள்ள விட்டான் ரயில் நிலையத்தில் அந்த 15 வயது சிறுமி தனது தோழி ஒருவருடன் சென்றுகொண்டிருந்த போது அவரை மர்ம நபர் ஒருவர் பின் தொடர்ந்து வந்துள்ளார். பின்னர் அந்த மர்ம நபர் திடீரென சிறுமியை தூக்கி சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
 
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து அந்த வழியா வந்துகொண்டிருந்த வாகனங்களிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது சிறுமிக்கு உதவி கொடுத்து காரில் ஏற்றிய நபரும் சிறுமியை காரில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்.
 
ஒரே நாளில் இரண்டு வெவ்வேறு நபர்களால் 15 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :