வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (21:19 IST)

உடலுறவுக்கு பின் காதலனை உயிரோடு சாப்பிட்ட ஓரினச்சேர்கை காதலன்

ஜெர்மனியில் அர்மின் மெய்வஸ் என்பவர் நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் கொண்டவர். இவர் தனது ஓரினச்சேர்க்கை காதலனுடன் உடலுறவு கொண்ட பின்னர், அவனை உயிருடன் சாப்பிட்டதாக தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். இந்த சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
ஜெர்மனியில் வசிக்கும் அர்மின் (42) ஒரு கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவருடன் பெர்ன்ட் பிரான்டஸ் என்பவர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இவர் ஒரு நர மாமிசம் சாப்பிடும் பழக்கம் கொண்டவராக இருந்து வந்துள்ளார்.
 
"என்னுடைய காதலனை உயிருடன் சாப்பிடக் கூடிய திறமை படைத்த நர மாமிசம் சாப்பிடுவோர் தாராளமாக முயற்சித்துப் பார்க்கலாம்" என்ற விளம்பரத்தையும் அவர் வெளியிட்டு இருந்தார்.
 
இந்நிலையில், காதலனை கடந்த 2001ஆம் ஆண்டு அவரை உயிருடன் சாப்பிட்டதாக அர்மின் அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், "எனது டேபிளை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்திருந்தேன். அதுதான் எனது மிகச் சிறந்த டின்னர். அந்த நேரத்தில் அவனுடைய முதுகிலிருந்து எடுத்த சில பகுதிகளை வைத்து ரோஸ்ட் செய்திருந்தேன். அருமையான டேஸ்ட் கொண்டவை அவை. வினோதமான சுவை...
 
அந்த ரோஸ்ட்  கடியை என்னால் மறக்க முடியாது. மிக வினோதமாக இருந்தது. சுவையாக இருந்தது. அதை....
 
மேலும் படிக்க அடுத்தப் பக்கம் பார்க்க.....

என்னால் மறக்க முடியாது. மிக வினோதமாக இருந்தது. சுவையாக இருந்தது. அதை என்னால் விவரிக்க முடியாது. மாமிசம் மாட்டுக் கறி போன்று சுவையாக இருந்தது. ஆனால் புதுமையான டேஸ்ட்டாகவும் தெரிந்தது. அவனுடைய தலையைத் துண்டித்து தோட்டத்தில் புதைத்தேன், பின்னர், உடல் பாகங்களை ஃபிரிட்ஜில் வைத்து அவ்வப்போது சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து சாப்பிட்டு வந்தேன்” என்று அவர் கூறியுள்ளார்.
 

 
இதையடுத்து, கடந்த 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், தண்டனை காலத்தில் சிறையில் இருக்கும் போது இவர் சுத்த சைவமாக மாறி விட்டதாக போலீசார் குறிப்பிட்டனர்.
 
இவருடைய பேட்டி விரைவில் யூடியூபில் Docs: Interview with a Cannibal என்ற பெயரில் வெளியாகவுள்ளதாக அந்த தொலைகாட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.