செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 1 ஆகஸ்ட் 2014 (11:56 IST)

காஸாவில் 72 மணி நேர போர் நிறுத்தம்

காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.நா.வும், அமெரிக்காவும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தினர் ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் வேண்டுகோளை ஏற்று மனிதாபிமான அடிப்படையில் காஸா பகுதியில் 72 மணி நேர போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகள் இன்றி ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதையடுத்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களுக்கு நிவாரணங்கள் அளிக்கவும், மருத்துவ உதவிகளைச் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இஸ்ரேல் படைகள் காஸா பகுதியை விட்டு வெளியேற வில்லை என்று கூறப்படுகிறது.

நேர போர் நிறுத்தம் பற்றி பேசி வரும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு வெடிகுண்டுகளை வழங்கியுள்ளதாக பென்டகன் செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.