வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 5 ஜனவரி 2015 (19:06 IST)

காந்தி படத்துடன் ‘காந்தி பாட்’ டின் பீர் விற்பனை: மன்னிப்பு கோரியது அமெரிக்க நிறுவனம்

‘காந்தி பாட்’ என்ற பெயரில் காந்தி படத்துடன் டின் பீர் வெளியிட்டதற்கு அமெரிக்க நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.
 
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தை சேர்ந்த ‘நியூ இங்கிலாந்து ப்ரீவிங்’ என்ற நிறுவனம் ‘காந்தி பாட்’ என்ற பெயரில் இந்தியாவில் டின் பீர் விற்பனை செய்து வருகிறது.
 
இந்நிலையில் காந்தியின் பெயரில் மது விற்பனை செய்வதற்கு, இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை யடுத்து அந்நிறுவனத்தின் தலைவர் மாட் வெஸ்ட்பால் மன்னிப்பு கேட்டுள்ளார்.
 
இது குறித்து நியூ இங்கிலாந்து ப்ரீவிங்’ நிறுவனத்தின் தலைவர்  மாட் வெஸ்ட்பால் கூறுகையில், “டின் பீரில் காந்தி படம் இடம்பெற்றுள்ளது, இந்தியர்களின் மனதை புண்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்கிறோம். யார் மனதையும் புண்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல.
 
எங்களது தயாரிப்பு நறுமணத்துடன் கூடிய சிறந்த பானம் மட்டும் அல்ல, இதை அருந்துபவர்கள் காந்திஜியின் அகிம்சையை வழியை தெரிந்து கொள்ள ஊக்குவிக்கும்.
 
அமைதி வழியில் போராடிய காந்தியை போற்றும் வகையில்தான் ‘காந்தி பாட்‘ அறிமுகம் செய்தோம். இதை அமெரிக்காவில் உள்ள ஏராளமான இந்தியர்கள் விரும்புகின்றனர்.
 
இதில் வெளியான படத்தை காந்திஜியின் பேரனும், பேத்தியும் பாராட்டியுள்ளனர். எங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். காந்தி பாட் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படவில்லை“ என்று கூறியுள்ளார்.