வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (19:50 IST)

மாயமான மலேசிய விமானத்தின் பாகத்தை உறுதி செய்தது பிரான்ஸ்

மீட்கப்பட்ட விமான உதிரி பாகம், மாயமான மலேசிய விமானமான எம்.எஹ் 370 விமானத்தின் பாகம்தான் என்று பிரான்ஸ் நாடு உறுதிப்படுத்தி உள்ளது.
 

 
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான MH370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.
 
பின்னர் அது நடுவானத்தில் சென்றதிற்கு பிறகு கட்டுப்பாட்டு அறையுடனான தகவலை நிறுத்திக்கொண்டதோடு, அதைப் பற்றியதான தகவல் முழுமையாக கிடைக்கவில்லை.
 
இந்நிலையில், கடந்த ஜுலை மாதம் 29 ஆம் தேதி பிரான்ஸின் ஆளுகைக்கு உட்பட்ட இந்து சமுத்திரத்திலுள்ள ரீயூனியன் தீவில் விமானப் பாகம் மீட்கப்பட்டிருந்தது. அது மலேசிய விமானத்தின் பாகம்தானா என்று நிபுணர் குழு ஆராய்ந்து வந்தது.
 
தற்போது ரீயூனியன் தீவில் மீட்கப்பட்ட சிறகுப் பாகம் காணாமல் போன மலேஷிய ஏயார் லயன்ஸ் நிறுவனத்தின் எம் ஏச் 370 விமானத்தின் உடையது என அதிகாரப் பூர்வமான தகவலை பிரான்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
 
நிறம் மற்றும் பராமரிப்பு பதிவுகள் ஊடாக குறித்த சிறகுப் பாகம் போய்ங் விமானத்தின் உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் அரச தரப்பு கூறியுள்ளது.
 
போய்ங் விமானத்தின் பாகத்தை தயாரித்த ஸ்பெய்னிலுள்ள ஏயார்பஸ் பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனத்தின் தொழில்நுட்பவியல் நிபுணர்கள், அதனை அடையாளம் கண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.