போனில் மூழ்கிய தாய்: நீச்சல் குளத்தில் மூழ்கிய 4 வயது மகன் [அதிர்ச்சி வீடியோ]


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வெள்ளி, 6 ஜனவரி 2017 (18:44 IST)
நீச்சல் குளத்தில் 4 வயது மகன் உயிருக்கு போராடிக்கொண்டிருக்க அவரது தாய் மும்மரமாக போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சீனாவின் சியாங்யாங் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றின் நீச்சல் குளத்தில் நின்று கொண்டு தாய் போனை பயன்படுத்திக் கொண்டிருக்க, அவரது 4 வயது மகன் அவருக்கு பின்னால் நீரில் தத்தளித்து உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

இதை சற்றும் கவனிக்காத அவர் தொடர்ந்து போனை பயன்படுத்திக்கொண்டிருந்தார். சற்று நேரம் கழித்து மகன் காணவில்லை என்று அறிந்த அவர் விடுதி ஊழியர்களின் உதவியுடன் குழந்தையை தேடியுள்ளார்.

இந்நிலையில், 30 நிமிடங்களுக்கு பிறகு சிறுவன் குளத்தில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவனை சோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

வீடியோ இங்கே:

 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :