Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எரிபொருள் பற்றாக்குறையால் விமான போக்குவரத்து பாதிப்பு; அல்லாடும் நியூசிலாந்து


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 19 செப்டம்பர் 2017 (13:58 IST)
நியூசிலாந்தில் ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

 
நியூசிலாந்தின் மிகப்பெரிய எரிபொருள் விநியோக நிறுவனமான இசட் எனர்ஜி நிறுவனத்தின் எரிபொருள் விநியோக குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதனால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நியூசிலாந்து ராணுவம் சிங்கப்பூர் ராணுவத்துடன் இணைந்து மேற்கொள்ள இருந்த பயிற்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 
ஜெட் விமானங்களுக்கான எரிபொருள் தட்டுபாடு ஏற்பட்டதால் 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதில் 6 சர்வதேச விமானங்களும் அடங்கும். இதேபோல் உயர்ரக எரிப்பொருள்களால் இயங்கும் கார்களின் இயக்கமும் தடைபட்டுள்ளது. மேலும் அரசு அதிகாரிகள் தேவையற்ற விமான பயணங்களை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
 
நியூசிலாந்தில் வரும் 23ஆம் தேதி பொதுத்தேதல் நடைபெற உள்ள நிலையில் ஆளும் அரசுக்கு இந்த நிகழ்வு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :