1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 26 மே 2018 (15:14 IST)

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் முதல் வி்ண்கலம்!

சூரியனுக்கு மிக அருகில் செல்ல உள்ள முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனித பெயர்களை தாங்கி செல்கிறது என்று நாசா தெரிவித்துள்ளது.

 
சூரிய குடும்பத்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நட்சத்திரம் சூரியன். சூரியனின் ஈர்ப்பு சக்தி புவியின் ஈர்ப்பு சக்தியைவிட 28 மடங்கு அதிகம். சந்திரன், செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு விண்கலங்கள் அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 
 
ஆனால் இதுவரை சூரியனை நெருங்க முடியவில்லை. சூரியனை ஆய்வு செய்ய விண்கலம் அனுப்ப நாசா தீவிரமாக முயற்சித்து வந்தது. இந்நிலையில் தற்போது ஜூலை 31ஆம் தேதி சூரியனுக்கு விண்கலம் அனுப்பப்படும் என்று நாசா தெரிவித்துள்ளது.
 
சூரியனின் வலிமண்டலத்திற்கு இதற்கு முன் சென்றதை விட இந்த ஆய்வு விண்கலம் சூரியனுக்கு மிக அருகில் சென்று ஆய்வு செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்கலத்தி 11 லட்சம் மனிதர்களின் பெயர்கள் கொண்ட மெமரி கார்டு பொருத்தப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.