1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 15 ஜனவரி 2016 (09:19 IST)

சீன பட்டாசு ஆலையில் தீ விபத்து: 5 பேர் உயிரிழப்பு

சீனாவிலுள்ள பட்டாசு தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்; மேலும் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.


 

 
சீனாவின் ஹூணன் மாகாணத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கிய 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
 
இந்த விபத்தில், படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ள விசாரணை நடத்தி வருகின்றனர் எனபது குறிப்பிடத்தக்கது.