வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha priya
Last Updated : திங்கள், 21 ஜூலை 2014 (16:40 IST)

சுட்டு வீழ்த்தப்பட்ட MH 17 விமானம் - பலியானவர்களின் சடலங்களை மீட்க கோரிக்கை

ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேஷிய தலைநகர் கோலாலம்பூருக்கு சென்ற பயணிகள் விமானம் எம்.எச் 17 உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களின் சடலங்களை மீட்டு தருமாறு மலேஷிய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  
எம்.எச் 17 விமானம் 33,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. 
 
இத்தாக்குதலில் விமானத்தில் பயணித்த 298 பேரும் பரிதாபமாக பலியாயினர்.  
இதை தொடர்ந்து வெளியான செய்தியில், சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் 173 பேர் நெதர்லாந்தை சேர்ந்தவர்கள், 44 பேர் மலேஷியர்கள், 28 பேர் ஆஸ்திரேலியர்கள், 12 பேர் இந்தோனேஷியர்கள், 9 பேர் இங்கிலாந்து நாட்டினர்,

4 பேர் ஜெர்மனிக்காரர்கள், 4 பேர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர்கள், 3 பேர் பிலிப்பைன்ஸ்வாசிகள், கனடா, நியூசிலாந்து, ஹாங்காங் நாட்டினர் தலா ஒருவர். 18 பேர் எந்த நாட்டினர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகின.
 

இந்நிலையில், இத்தாக்குதலில் பலியானவர்களில் 192 பேரின் சடலங்களை கிளர்ச்சியாளர்கள் கொண்டு சென்றுவிட்டதாக உக்ரைன் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இச்சடலங்கள் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தனது மகனையும், மருமகளையும் இழந்த மலேஷியாவைச் சேர்ந்த தாய் ஒருவர் ரஷ்ய அதிபர் புடினிடம், தனது பிள்ளைகளை (பலியான மகன், மருமகளின் சடலங்களை) வீட்டிற்கு அனுப்புங்கள் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.