வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 27 ஜனவரி 2015 (16:17 IST)

வெள்ளை மாளிகையில் விழுந்து கிடந்த ஆளில்லா விமானம்

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் நேற்று திங்கட்கிழமை (26-01-2015) ஆளில்லா விமானம் ஒன்று விழுந்து கிடந்தது.
 
நேற்று முன்தினம் இரவு அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதியில் திங்கட்கிழமை அதிகாலை 03.00 மணி அளவில் ஒரு மரத்தின் மீது மோதிய சிறிய ரக ஆளில்லா விமானம் ஒன்று புல்வெளியில் விழுந்து கிடந்தது.
 

 
இந்த விமானம் குறித்து அமெரிக்க ரகசியப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இது, முற்றிலும் பாதுகாப்பு வளையத்தை மீறி நடந்துள்ளதால், தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. ஆனால் ரகசிய பிரிவால் யார் என அடையாளம் காணமுடியவில்லை. இது 2 அடி நீளமும் 2 பவுண்ட் எடையும் கொண்டதாக இருந்தது.
 
அமெரிக்கா அதிபர் ஒபாமா அவரது மனைவியுடன் இந்திய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ள நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஒபாமா மகள்கள் சாஷா, மாலியா ஆகியோர் இந்தியா வரவில்லை. பள்ளியில் விடுமுறை கிடைக்காததால் அவர்களால் வரமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.