வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (14:21 IST)

ஃபேஸ்புக் செயற்கைகோள் விபத்து: நிமிடத்தில் 200 மில்லியன் டாலடர் புஷ் (வீடியோ)

ஃபேஸ்புக் நிறுவனத்தின் கனவு திட்டத்துக்காக விண்ணில் செலுத்தப்பட இருந்த 6 செயற்கைகோள்கள் விபத்தில் வெடித்து சிதறியது.


 

 
ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள 14 நாடுகளின் இணையதள இணைப்பை மேம்படுத்துவதற்காக சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பில் ஆமோஸ்-6 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. இதன்மூலம் ஃபேஸ்புக் நிறுவனத்தின் கனவு திட்டம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
 
ஆமோஸ்-6 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த உலகின் முன்னணி தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸுடன் ஒப்பந்தம் செய்தது ஃபேஸ்புக் நிறுவனம்.
 
சனிக்கிழமை பால்கான்-9 என்ற ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான சோதனை முயற்சி நடைப்பெற்றது. அப்போது திடீரென்று ராக்கெட் வெடித்ததில் ஃபேஸ்புக்கின் 6 செயற்கைகோள்களும் வெடித்து சிதறின. ஃபேஸ்புக்கின் கனவு திட்டம் தகர்ந்தது.
 
ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனர் எலன் மஸ்க் இந்த விபத்தால் ஒரே நாளில் சுமார் 390 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
 
தற்போது ஆப்பிரிக்காவில் சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள மார்க் ஸக்கர்பேர்க் இந்த கனவு திட்டத்தின் விபத்து குறித்து கூறியிருப்பதாவது:-
 
பல விதமான மக்களுக்கு பலன் அளித்திருக்க வேண்டிய இத்திட்டம் விபத்தால் தோல்வி அடைந்துவிட்டது. இதனால் பெரிதும் ஏமாற்றம் அடைந்துள்ளேன்.
 
அதே வேளையில் பேஸ்புக்கின் மற்ற தொழில்நுட்ப திட்டமான 'அக்யூலா' மூலம் தங்களின் இலக்கை அடையும் வரை தொடர்ந்து பணி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
 
நன்றி: USLaunchReport