வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2016 (12:53 IST)

பேஸ்புக்கில் இனி பணப் பரிமாற்றம் செய்யலாம்: புதிய வசதி அறிமுகம்

பிரபல சமூக வலைத்தளமாகிய பேஸ்புக்கில் பணப் பரிமாற்றம் செய்யும் புதிய வசதி ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.


 

 
பேஸ்புக் வலைத்தளம் தனது மெசஞ்சர் ஆப் வழியாக மொபைல் பணப் பரிமாற்ற சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.
 
பணம் பரிமாற்றம் செய்யப்படும் இரு நபர்களிடமும் டெபிட் கார்டு இருந்தாலே போதுமானது. எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக இந்த சேவையை வழங்க பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
 
இந்த வசதி தற்போது அமெரிக்காவில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மற்ற நாடுகளுக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
 
ஆன்ட்ராய்டு மொபைலில் இந்த வசதியை பயன்படுத்த முதலில் நாம் நமது டெபிட் கார்டு பற்றிய தகவல்களை பேஸ்புக் மெசஞ்சர் ஆப்-பில் இணைக்க வேண்டும்
 
இதில், பயனாளர்களின் டெபிட் கார்டு பற்றி விவரங்களை பாதுகாப்பதற்காக "பின் பேஸ்டு பாஸ்வேர்டு" பாதுகாப்பும் தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.