வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 2 டிசம்பர் 2017 (16:40 IST)

விமானத்தில் பேஸ்புக் நிறுவனரின் தங்கைக்கு பாலியல் தொல்லை!

உலகப் புகழ் பெற்ற பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். இவரின் தங்கை தனக்கு விமானத்தில் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
மார்க் ஜுக்கர்பெர்க்கின் தங்கையான ராண்டி ஜுக்கர்பெர்க் மெக்சிகோவிலிருந்து  மஜத்லன் நகருக்கு அலாஸ்கா ஏர் விமானத்தில் சென்றுள்ளார். விமானத்தில் அவருக்கு அருகாமையில் இருந்த பயணி ஒருவர் ராண்டியிடம் பாலியல் உரையாடல் மற்றும் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மற்ற பெண் பயணிகள் குறித்தும் அவர் கமெண்ட் அடித்து உள்ளார்.
 
சற்று நேரம் பொறுமையாக இருந்த ராண்டி, இது குறித்து விமான ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்களோ இந்த நபர் அடிக்கடி விமானத்தில் வருபவர் என்றும்  அவர் சொல்வதை பெரிதாக எடுத்துக் கொள்ளவேண்டாம் என்றும் பொறுப்பில்லாமல் பதில் கூறியுள்ளனர். வேண்டுமென்றால் வேறு இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளனர். தான் எந்த தவறும் செய்யாத போது நான் ஏன் வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என  ராண்டி ஜுக்கர்பெர்க் விமான ஊழியர்களிடம் கேட்டுள்ளார். 
 
அலாக்ஸா விமான நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மார்க் ஜுக்கர்பெர்க்கை  தொடர்பு கொண்டு பேசியதாகவும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தபடுவதாகவும் தற்காலிகமாக அந்த பயணி பயணிக்க தடை விதித்துள்ளதாகவும் மார்க் தெரிவித்துள்ளார்.