நான் மக்களை பிரித்துவிட்டேன்; மன்னிப்பு கேட்டு உருகிய ஃபேஸ்புக் நிறுவனர்


Abimukatheesh| Last Updated: திங்கள், 2 அக்டோபர் 2017 (13:46 IST)
நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மூலம் மக்களை பிரித்து விட்டதற்காக மன்னிப்பு கேட்டு கொள்கிறேன் என ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

 

 
யூதர்களின் புனித தினமான யோம் கிப்புர் நேற்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
 
நம்முன் கடந்து போன ஒரு வருடத்தை பிரதிபலிக்கும் அதே நேரத்தில் நமது தவறுகளுக்கு மன்னிப்பினைக் கோரி நிற்கிறோம். நான் உருவாக்கிய சமூக வலைதளமான ஃபேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள் மூலம் பெரும்பாலும் மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்துவிட்டது நிகழ்ந்திருக்கிறது. 
 
அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மேம்படுத்திக் கொண்டு சரியாகச் செயல்பட முயற்சிக்கிறேன். வரும் ஆண்டு நம் அனைவருக்கும் சிறப்பான ஒன்றாக அமையும்.
 
இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :