வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : புதன், 29 ஜூலை 2015 (01:50 IST)

அப்துல்கலாம் மறைவு: அமெரிக்கவாழ் இந்தியர்கள் அஞ்சலி

இந்தியாவின் முன்னாள் குடியரசு தலைவர், அப்துல்கலாம் மறைவுக்கு அமெரிக்க இந்தியர்கள் அஞ்சலி செலுத்தினர்.
 

 
இது குறித்து, வெளிநாடுவாழ் பாஜக ஆதரவாளர் சங்கத்தின் தலைவர் சந்திர படேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இந்தியாவில் உள்ள அனைத்துதரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்தமானவராக  இருந்தவர் அப்துல்கலாம். அது போலவே, பிரபலமான குடியரசுத் தலைவராக இருந்தவரும் அவரே. நமது நாட்டில் உள்ள லட்சக்கணக்கான குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் உத்வேகம் கொடுத்தவர் அப்துல்கலாம்தான்.
 
மக்களின் குடியரசுத் தலைவராக வாழ்ந்து மறைந்த அப்துல்கலாமுக்கு, உலக நாடுகளில் வாழும் ஒட்டுமொத்த இந்தியர்களின் சார்பில் வீரவணக்கத்தை சமர்ப்பணம் செய்திறோம். அவரது மறைவு இந்தியாவுக்கு மிகப் பெரிய இழப்பு ஆகும். அவர் விட்டுச் சென்றுள்ள இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்றார்.