Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தீவுக்கடியில் புதிய கண்டம் ஆய்வாளர்கள் உறுதி!!


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (16:08 IST)
மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 
மொரீஷியஸ் தீவு, கடந்த 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக தோன்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனெனில் அத்தகைய தீவில் 9 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள எந்தவொரு பாறைகளும் காணப்படவில்லை. 
 
கடந்த 16 ஆம் நூற்றண்டு வரை அங்கு மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்களும் எதுவும் இல்லை. தற்போது, மொரீஷியஸ் தீவில் 'சிர்கோன்' எனப்படும் கனிமப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, 3 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தது.
 
ஒன்பது மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாகத் தோன்றியதாக கூறப்படும் மொரீஷியஸ் தீவில், 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக உள்ள கனிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
 
இதன்மூலம் மொரீஷியஸ் தீவுக்கடியில் கண்டம் மறைந்ததற்கான தடயங்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :