வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 25 செப்டம்பர் 2017 (18:38 IST)

பல ஆயிரம் அடிமைகள்; வெளியான எகிப்து பிரமிட் ரகசியம்!!

ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்தில் உள்ள கிசா பிரமிடின் கட்டுமான ரகசியங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 


 
 
இந்த பிரமிட் சுமார் 2500 கிலோ எடை கொண்ட கற்களால் கட்டப்பட்டுள்ளது. இவ்வளவு எடை கொண்ட கற்களை மனிதர்கள் எவ்வாறு நகர்த்தி சென்று, கட்டுமானத்தில் ஈடுபட்டது எவ்வாறு என பல கேள்விகள் எழுந்தது.
 
தற்போது இந்த கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது. அதாவது ஆயிரக்கணக்கான அடிமைகள் படை ஒன்றிணைந்து இந்த பிரமிட்டை கட்டிமுடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
படகுகள் மூலம் கொண்டுவரப்பட்ட கற்கள் பிரத்தியேகமான வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் மூலம் இழுத்து செல்லப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
 
சுமார் 2.3 மில்லியன் கற்கள் படகுகள் மூலம் நைல் நதி வழியாக கொண்டுவரப்பட்டுள்ளது. அதே போல் அங்கிருந்த அடிமைகள் 20 ஆண்டுகளாக உழைத்து இதை கட்டிமுடித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.