1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 6 பிப்ரவரி 2016 (09:41 IST)

தைவானில் 6.4 ரிக்டர் அளலில் நிலநடுக்கம்: குழந்தை உள்ளிட்ட 3 பேர் உயிரிழப்பு

தைவான் நாட்டின் தென்பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 10 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.


 

 
இது போன்ற இயற்கை சீற்றத்தால் அடிக்கடி பாதிக்கப்படும் தைவானில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
 
தைவான் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான காவோசியுங் நகரில் இருந்து சுமார் 39 கிலோமீட்டர் தொலைவில் பூமியின் அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 
இந்த லநடுக்கத்தின் விளைவாக 16 தளங்களைக் கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்பட நான்கு கட்டிடங்கள் சரிந்து விழுந்தன.
 
இந்த இடிபாடுகளில் சிக்கிய 10 மாத குழந்தை உள்ளிட்ட மூவர் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
அத்துடன், அருகாமையில் உள்ள இன்னொரு 7 மாடி கட்டிடத்தில் சிக்கியிருந்த சுமார் 200 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
அவர்களில் காயமடைந்த நூற்றுக்கும் அதிகமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இதைத் தொடர்ந்து, பேரிடர் மீட்புக் குழுவினர், இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.