வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 ஏப்ரல் 2015 (08:18 IST)

நிலநடுக்கத்திற்கு நேபாளத்தில் பலியானோர் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியது

நேபாளத்தில் ஏற்பட்ட  சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4000 ஐ தாண்டியுள்ளது, கட்டட இடிபாடுகளில் மேலும் ஆயிரக்கணக்கானோர் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.


 

 
நேபாள நாட்டின் மையப்பகுதியில் உள்ள லாம்ஜங் மாவட்டத்தில் சனிக்கிழமை நண்பகல் 11.46 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
 
ரிக்டர் அளவுகோலில் 7.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், சுமார் இரண்டரை நிமிடங்களுக்கு நீடித்தது. பின்னர், சிறிய அளவிலான கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் மீண்டும் பல முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன.
 
இந்த நிலநடுக்கத்தால் நேபாளம் முழுவதும் உள்ள பெரும்பாலான கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்துக்கு இதுவரை 4000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மீட்புபப் பணிகள் 3 ஆவது நாளாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
 
இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் தரைமட்டமாகியுள்ளன. பொது மக்கள் பயத்துடன் தொடர்ந்து சாலைகளில் வசித்துவருகின்றனர்.
 
இந்நிலையில் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அங்கு 1 லிட்டர் தண்ணீர் ரூ.150 க்கு விற்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.