வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 28 நவம்பர் 2015 (10:11 IST)

சிலி நாட்டின் கடல் பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு

தென் அமெரிக்க நாடான சிலியின் கடல் பகுதியில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


 

 
சிலி நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
கடலுக்கு அடியில், 29 கிலோமீட்டர் ஆழத்திலும், அண்டோபாகஸ்டா நகரின் தென்மேற்கு பகுதியில் இருந்து 132 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.