வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Geetha Priya
Last Updated : வெள்ளி, 25 ஜூலை 2014 (16:17 IST)

விமானம் நொறுங்கிவிட்டால்? - சுட்டு வீழத்தப்பட்ட மலேசிய விமானத்தில் ஏற தயங்கிய சிறுவன் கேள்வி

சுட்டு வீழத்தப்பட்ட எம்.எச் 17 மலேசிய விமானத்தில் பயணித்த 11 வயது சிறுவன் விமானத்தில் ஏற தயங்கியதாகவும், விமானம் விழுந்து நொறுங்கிவிட்டால் என்ன ஆகுமென கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து கோலாலம்பூர் நோக்கி சென்று கொண்டிருந்த எம்.எச் 17 மலேசிய விமானம் சுட்டு வீழத்தப்பட்டதில் அதில் பயணித்த 298 பேரும் பரிதாபமாக பலியாயினர்.
 
இந்த துயர சம்பவத்திற்கு 2 நாட்களுக்கு முன் இருந்தே அந்த விமானத்தில் பயணிக்கவிருந்த மிகுவேல் என்னும் 11 வயது நெதர்லாந்து சிறுவன் தனது தாயிடம், 'நான் இறந்துவிட்டால் என்ன ஆகும்? என்னுடைய உடல் புதைக்கப்பட்டால் என்ன நடக்கும்? உயிர் எப்படி பிரியும்? போன்ற கேள்விகளைத் தொடர்ச்சியாக கேட்டுள்ளார்.
எப்போதும் விளையாட்டுத்தனமாக இருக்கும் தனது மகன் சோகமாக இதே கேள்விகளைத் திரும்ப திரும்ப கேட்டது தாய்க்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. எனினும், பாலியில் உள்ள பாட்டியைச் சந்திக்க சிறுவனையும் அவனது மூத்த சகோதரனையும் தயார்படுத்தி விமான நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். 
 

விமான நிலையத்தில் தாயைப் பிரியும் நேரத்தில், தனக்கு போக விருப்பம் இல்லை எனவும், இந்த விமானம் விழுந்து நொறுங்கிவிட்டால் என்ன ஆகுமெனவும் கூறிய சிறுவனைச் சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு வீடு திரும்புவதற்குள் விமானம் நொறுங்கிவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது.
இரு மகன்களையும் இழந்து அதிர்ச்சியில் உறைந்த தாய், மிகுவேல் சொன்னதை கேட்டு அவர்களது பயணத்தை ரத்து செய்திருக்கலாம் எனக் கூறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.