வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (19:14 IST)

ஆளில்லா விமானத்தால் மூடப்பட்ட விமான நிலையம்

துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஆளில்லா விமானம் ஒன்று சுற்றிசுற்றி பறந்துக் கொண்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதோடு விமான நிலையம் சுமார் அரை மணி நேரம் வரை மூடப்பட்டது.


 

 
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஆளில்லா விமானம் ஒன்று சுற்றிசுற்றி பறந்துக் கொண்டிருந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
 
விமான நிலையத்தில் தரை இறங்க அனுமதி கேட்டிருந்த விமானங்கள் மற்றும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல வேண்டிய சில விமானங்கள் உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டன. விமான நிலையம் அரை மணி நேரத்துக்கு மூடப்பட்டது. 
 
பின்னர், அரை மணிநேரம் கழித்து அந்த விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. துபாய் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதை சுற்றி 1 கி.மீ தூரம் வரை லேசர் ஒளி மற்றும் ஆளில்லா பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அந்நாட்டு அரசு ஏற்கனவே தெரிவித்து இருந்தது.
 
இருப்பினும், அதை மீறி சில நேரங்களில் ஆளில்லா மர்ம விமானங்கள் அவ்வப்போது பறக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மேலும் இதேபோல் இதற்கு ஒருமுறை ஆளில்லா விமானம் பறந்து, விமான நிலையம் சுமார் 1 மணி நேரம் வரை மூடப்பட்டிருந்த்து குறிப்பிடத்தக்கது.