குடிக்கும் பந்தயத்தில் வெற்றி பெற்று உயிரை விட்ட குடிகாரர் - வீடியோ!

Sasikala| Last Updated: திங்கள், 6 மார்ச் 2017 (11:33 IST)
டோமினிக்கன் நாட்டைச் சேர்ந்தவர் கெல்வின் ரஃபெல் மெஜியா, வயது 23. இவருக்கு மது அருந்துவதில் ஆர்வம் கொண்டவர்.  தினமும் மது குடிக்கும் இவருக்கு, மது குடிப்பதில் இவரை யாரும் மிஞ்ச முடியாதாம். அந்த அளவிற்கு இவர் மது அருந்துவாராம்.

 
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் வழக்கமாக மது அருந்தும் நைட் கிளப் கடைக்கு சென்றுள்ளார். அங்கு மது குடிக்கும் போட்டியும் நடந்துள்ளது. இதில் கலந்துகொண்ட மெஜியா, மெக்சிகன் நாட்டு மது வகையான டக்கீலா என்ற மதுவை  ஒரே மூச்சில் பாட்டில் முழுவதும் குடிக்க வேண்டும் என்பதுதான் போட்டியாம். போட்டியில் கலந்து கொண்டு ஒரே மூச்சில்  குடித்து விட்டார். போட்டி தொகையான 520 டாலரை வென்றுள்ளார்.
 
ஆனால், அதன் பின் சில நிமிடங்களில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து தலை தொங்கியது. இதனை தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர் மெஜியா இறந்துவிட்டதாக கூறினார். மெஜியாவிற்கு இரண்டு வயதில் ஒரு மகள் இருப்பதாக அந்நாட்டு  செய்திக்குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் குடிக்கும் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 
 
மெஜியாவின் குடிக்கும் அந்த வீடியோ....
 


இதில் மேலும் படிக்கவும் :