வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By ashok
Last Modified: வியாழன், 3 செப்டம்பர் 2015 (18:03 IST)

மலேசியா அருகே படகு கவிழந்து விபத்து-70 பேர் மாயம்

மலேசியா அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணம் செய்த 100 பேரில் 70 பேர் மாயம் ஆனார்கள். இதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மலேசியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயன்ற இவர்கள் இந்தோனேசிய நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மலேசியாவுக்கு ஆட்களை ஏற்றிவந்த படகு ஒன்று மலேசியா அருகே செலாங்கார் மாகாணத்தின் மலாக்கா ஜலசந்தியில் நேற்று காலை கவிழந்து விபத்துக்குள்ளானது. இந்த படகில் சுமார் 100 பேர் பயணம் செய்தனர், அவர்களில் 13 பெண்கள் உள்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் மாயம் ஆகி உள்ளதாக மீட்பு படையினர் தெரிவித்தனர். காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்காக  12 கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

படகு கவிழ்ந்த தகவலை மீட்பு படையினருக்கு மீனவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 15 பேரை உள்ளூர் மீனவர்கள், மீட்பு படையினரும் சேர்ந்து மீட்டனர்.  மற்றவர்களை மீட்க மீட்பு படையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படகில் பயணம் செய்த அனைவரும் இந்தோனேசிய நாட்டை  சேர்ந்தவர்கள். சட்டவிரோதமாக மலேசியாவிற்கு வேலை பார்ப்பதற்காக சென்றுள்ளனர். மலாகா ஸ்டிரெய்ட் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த போது படகு திடீரென விபத்துக்குள்ளனதாக மீனவர்கள் தெரிவித்தனர்.