வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ashok
Last Updated : ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (14:32 IST)

காதலர் தினம் கொண்டாட வேண்டாம்: பாகிஸ்தான் அதிபர் அறிவுறுத்தல்

உலகம் முழுவதும் இன்று காதலர்கள் உற்சாகமாக காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால், காதலர் தினம் கொண்டாட வேண்டாம் என்றும் அது மேற்கத்திய கலாசாரம் என்றும் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன் தெரிவித்துள்ளார்.
 
 
பாகிஸ்தானில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்துறை அமைச்சகம் சார்பில் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், காவலர்களும் நட்சத்திர ஹோட்டல் மற்றும் பொது இடங்களில் காதலர் தினம் கொண்டாடுவதை தடுக்க ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் மறைந்த சுதந்திர போராட்ட வீரர் சர்தார் அப்துல் ரப் ரிஷ்தாரின் நினைவுதினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
 
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களில் மாணவிகள் பெருமளவில் பங்கேற்று இருந்தனர். இந்த விழாவில் பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேன் சிறப்பு விருந்துனராக கலந்து கொண்டார். 
 
அப்போது அவர் பேசுகையில்" காதலர் தினம் என்பது மேற்கத்திய கலாசாரம். அது நமது கலாசாரத்துடன் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே, முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பாகிஸ்தானில் அதற்கு இடமில்லை.
 
அந்த தினத்தை தவிர்த்து விடுங்கள். நமது நாட்டில் காதலர் தினம் கொண்டாட வேண்டாம். அதை உங்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள்" என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். 
 
மேலும், பாகிஸ்தான் சைபர் பக்துன்கவா மாகாண தலைநகர் பெஷாவரில் இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், காதலர் தினத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.