12 நாள் குழந்தையை கடித்து கொன்ற வளர்ப்பு நாய்… அதிர்ச்சி செய்தி!

Last Updated: வியாழன், 17 செப்டம்பர் 2020 (10:16 IST)

இங்கிலாந்தில் பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை வளர்ப்பு நாயேக் கடித்து கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் வசித்து வரும் ஸ்டீபன் ஜாய்ன்ஸ் மற்றும் அபிகெய்ஸ் எல்லிஸ் என்ற தம்பதிகளுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து மருத்துவமனையில் இருந்து குழந்தை வீட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது.

வீட்டில் குழந்தை அருகெ தாய் தந்தையர் யாரும் இல்லாத போது அவர்கள் வீட்டு நாயே அந்த குழந்தையை கடித்துள்ளது. இதனைப் பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை. குழந்தையை பாதுகாப்பதில் அலட்சியமாக இருந்ததற்காக பெற்றோர் ஸ்டீபன் ஜாய்ன்ஸ், அபிகெய்ஸ் எல்லிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாயை காவல்துறையினர் அழைத்துச் சென்றுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :