1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 2 ஜூலை 2015 (16:34 IST)

ஆஸ்திரேலியாவிலும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள இந்திய நிறுவனம் - அதிர்ச்சி தகவல்கள் வெளியீடு

நிலக்கரி சுரங்கம் தோண்டுவது தொடர்பாக ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவைச் சேர்ந்த அதானி கம்பெனி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
 

 
கடந்த 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் மாநில வளர்ச்சித்துறை, இந்தியா பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்துடன் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவது மற்றும் கட்டுமானத் திட்டங்கள் தொடர்பாக பல ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
 
அதில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நிலக்கரிச் சுரங்கங்கள் தோண்டுவதும் அடங்கும். இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் ரூ.1,00,144 கோடி மதிப்பில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டுவதில் முறைகேடு நடந்திருப்பதாக ஏபிசி செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக புதன்கிழமை ஆஸ்திரேலியாவில் உள்ள ஏபிசி என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அதானி குழுமம் ரூ. 1,00,144 கோடி மதிப்பில் நிலக்கரிச் சுரங்கம் தோண்டும் திட்டம் குறித்து முடிவெடுப்பதில் ஆஸ்திரேலிய அரசின் வருவாய்த்துறையும் சம்பந்தப்பட்ட அமைச்சகமும் புறக்கணிக்கப்பட்டுள்ளது.
 
இத்திட்டம் தொடர்பாக முடிவெடுக்கும் கூட்டத்திற்கு திட்டமிட்டே வருவாய் துறைக்கும் மாகாண அமைச்சகத்திற்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. இந்தக் கூட்டமே ஒரு திட்டமிட்ட சதியாக உருவாக்கப்பட்டது. அமைச்சகம் மற்றும் வருவாய் துறையிடம் கலந்து ஆலோசிக்காமல் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த முன்வரைவு கையெழுத்தாகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.