வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 12 அக்டோபர் 2015 (16:29 IST)

பருவநிலை மாற்றத்தால் டெங்கு காய்ச்சல் அதிகமாகப் பரவும்

வரும் ஆண்டில் டெங்கு காய்ச்சல் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகமான அளவில் பரவும் என்று அமெரிக்காவின் புளோரிடா பல்கலைக்கழக ஆய்வு அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
 

 
இது தொடர்பாக புளோரிடா பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த டிரேக் கூமிங்ஸ் என்ற ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் கூறுகையில், “கடந்த இரு பத்தாண்டுகளாக பசிபிக் சமுத்திரத்தில் உருவாகி வரும் எல் நினோ எனப்படும் வெப்பமான பருவநிலை மாற்றத்தினால் டெங்கு காய்ச்சல் அதிகரிக்கும்.
 
இதனால் தென் கிழக்கு ஆசிய நாடுகள் பாதிக்கப்படும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவைச்சேர்ந்த 8 நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்று தெரிகிறது. எல்நினோ மாற்றத்தினால் கடந்த 1997லிருந்து இந்த எட்டு நாடுகளில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.
 
அடுத்த ஆண்டில் அதிகரிக்க உள்ள டெங்கு காய்ச்சலினால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களும் மிக அதிகமான அளவில் இருப்பர். டெங்கு காய்ச்சலை பரப்பும்வைரஸ் வெப்ப மண்டலத்திலுள்ள இந்நாடுகளில் அதி கரித்து வரும் தட்ப வெப்ப நிலையால் அதிகமான அளவில் பரவும்” என்றார்.