வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 28 செப்டம்பர் 2016 (00:25 IST)

அதிபர் வேட்பாளர்களுக்கு இடையே அனல் பறந்த விவாதம்!

அமெரிக்க நாட்டில் நவம்பர் 8 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது.


 
 
இந்நிலையில், அமெரிக்காவின் இரு பிரதான கட்சிகளான ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டனும், டொனால்ட் டிரம்பும்  நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். 90 நிமிடங்கள் நீடித்த இந்த விவாதம் நியூயார்க் நகரின் ஹாஃப்ஸ்ட்ரா பல்கலைகழகத்தில் நடைபெற்றது.
 
இவ்விவாதத்தில், நடுத்தர வர்க்க மக்களுக்கான வரி விதிப்பு, அமெரிக்க துப்பாக்கி கலாச்சாரம், ஐ.எஸ். எதிர்ப்பு நடவடிக்கை, அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப் பட்டது.
 
டொனால்ட் டிரம்ப்: அமெரிக்கா வரி விதிப்புக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அமெரிக்காவிலிருந்து தொழில் நிறுவனங்கள் வெளியே செல்லாமல் இருக்கும். இதன் மூலம் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் பெருகும்.
 
ஹிலாரி கிளிண்டன்: எல்லா தரப்பு மக்களுக்கான ஒரு பொதுவான பொருளாதாரக் கொள்கையே அவசியம்.
 
டொனால்ட் டிரம்ப்: அமெரிக்காவின் அதிபராவதற்கு போதிய திறமை ஹிலாரி கிளிண்டனிடம் இல்லை.
 
ஹிலாரி கிளிண்டன்: டிரம்ப் என்னை குற்றஞ் சாட்டுவதற்காகவே இந்த விவாத நிகழ்ச்சிக்கு தயாராகி உள்ளார். நானும் விவாதத்துக்கு தயாராகிதான் வந்திருக்கிறேன். டிரம்ப்பின் பெரும்பாலான யோசனைகள் இனரீதியாக உள்ளன. அகதிகள் வருவதை தடுப்பதற்கு அமெரிக்கா-மெக்சிகோ இடையே சுவர் எழுப்பும் திட்டத்தைதான் டிரம்ப் வைத்துள்ளார். அதுதவிர அவரிடம் வேறு யோசனைகள் இல்லை. மத்திய கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிவாத அமைப்புகளை எப்படி எதிர் கொள்வது போன்ற திட்டங்கள் டிரம்ப்பிடம் இல்லை. டொனால்டு டிரம்ப தனது வருமான வரி கணக்குகளை வெளியிடாமல் தொடர்ந்து மறைத்து வருவது ஏன்?.
 
டொனால்ட் டிரம்ப்: ஹிலாரி வெளியுறவுச் செயலராக இருந்த போது ஊழல் மற்றும் வரி ஏய்ப்பு செய்த ஆதாரங்கள் அடங்கிய 33,000 இமெயில்களை அமெரிக்க போலீஸின் விசாரணையிலிருந்து தப்பிப்பதற்கு ஹிலாரி நீக்கிய தகவலை வெளியிட்டால், எனது வருமான வரி கணக்குகளை வெளியிடுவேன்.
 
இவ்வாறாக விவாதம் அனல் பறக்க நடந்தது. அடுத்த விவாத நிகழ்ச்சி அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் அக்டோபர் 9-ம் தேதி நடைபெறும்.