விஷ ஊசி மூலம் கொலை குற்றவாளிக்கு தண்டனை

dead
Last Updated: வியாழன், 17 மே 2018 (13:36 IST)
கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் கார்சியா என்ற நபர் தனது காதலியை சந்திக்க சென்றார். அப்போது கொள்ளையர்கள் கார்சியாவை சுட்டுக்கொன்றனர்.
 
இதுகுறித்து வழக்கு பதிவுசெய்த போலீஸார், இச்சம்பவத்தில் கார்சியாவின் காதலிக்கும்  தொடர்புடையதை கண்டுபிடித்தனர். கார்சியாவை சுட்டுக்கொன்ற முக்கிய குற்றவாளியான கேஸ்டில்லோ கைது செய்யப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, சிறையில் இருந்த கொலைக் குற்றவாளி கேஸ்டில்லோவிற்கு விஷ ஊசி செலுத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :