வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : சனி, 18 மார்ச் 2017 (05:31 IST)

பதவி நீக்கப்பட்ட தென்கொரிய அதிபர் தோழியின் மகள் நாடு கடத்தல். டென்மார்க் அதிரடி

உடன்பிறவா தோழியால் பிரச்சனைகளை சந்திக்கும் நிலை தமிழகத்தில் மட்டுமின்றி தென்கொரியாவிலும் சமீபத்தில் நடந்தது. தென்கொரிய அதிபர் பார்க் கியூன் ஹை மற்றும் அவரது நெருங்கிய தோழி சோய் சூன் ஆகியோர் கடந்த சில வருடங்களாக ரகசிய கோப்புகள் ஆய்வு செய்வது உள்பட சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளில் மேற்கொண்டதால் அதிபர் பதவியை இழந்தார்



 


இந்நிலையில் பதவி நீக்கம் செய்யப்பட்ட அதிபரின் தோழி சோய் அவர்களின் மகள் சங் கடந்த சில வருடங்களாக டென்மார்க்கில் வசித்து வருகிறார். அவரது தாயாஅரின் நட்பால் ஒரு நாட்டின் அதிபர் பதவியே பறிபோனது குறித்து டென்மார்க் அரசு தீவிரமாக ஆலோசித்து அவரது மகள் சங் யோராவினை நாடு கடத்திட முடிவு செய்துள்ளது.

நாடு கடத்தும் முடிவு குறித்து சோய் சூன் மகள் சங் யோராவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், இதுகுறித்து அவர் மூன்று நாட்களில் முடிவெடுத்து நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற கால அவகாசத்தை டென்மார்க் அரசு அவருக்கு வழங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.