டர்பன் கலருக்கு ஏத்தமாறி ரோல்ஸ்ராய்ஸ் கார்: சிங்-ன் சேட்டை!

Last Updated: புதன், 6 பிப்ரவரி 2019 (16:34 IST)
ரூபன் சிங் என்பவர் லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி தொழிலதிபர். இவர் தனது டர்பன் கலருக்கு ஏற்ற மாதிரி ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயணிப்பாராம். 
 
7 நாள் ரோல்ஸ்ராய்ஸ் சேலஞ்ச் மூலம் இவர் பிரபலமாகியுள்ளார். லண்டனில் நிதி நிறுவனத்தை நடத்தி வரும் இவர் ஆடம்பரக் கார்கள் மீது குறிப்பாக ரோல்ஸ்ராய்ஸின் மீது ஆர்வம் கொண்டவர்.
 
இவருடம் வாரத்தின் 7 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காரில் பயணிக்க 7 நிறங்களைக் கொண்ட ரோல்ஸ்ராய்ஸ் காரை பயன்படுத்தி வருகிறார். அதுவும் தனது டர்பன் நிறத்திற்கு ஏற்ப காரில் பயணிப்பாராம். 
 
கடந்த 2000 ஆம் ஆண்டு சன்டே டைம்ஸ் பத்திரிகை, ரூபன் சிங்குக்கு சுமார் ரூ.738 கோடி சொத்து இருப்பதாகத் தகவலை வெளியிட்டது. இவர் ’பிரிட்டிஷ் பில்கேட்ஸ்’ என்றும் அழைகப்படுகிறார். 
 
இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள காரின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி உள்ளன.


இதில் மேலும் படிக்கவும் :