Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செல்ஃபி எடுக்க முயன்ற பெண்ணை கடித்து குதறிய முதலை


Abimukatheesh| Last Updated: திங்கள், 2 ஜனவரி 2017 (18:53 IST)
தாய்லாந்து நாட்டில் பெண் ஒருவர் முதலையுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். முதலை அவரை கடித்து குதறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 
தாய்லாந்து நாட்டில் உள்ள காவ் யாய் தேதிய பூங்காவுக்கு சுற்றுலா வந்த முரியல் பெனுடுலியர்(41) என்ற பிரெஞ்சு பெண் பூங்காவில் உள்ள முதலைகளுடன் செல்ஃபி எடுக்க முயற்சித்துள்ளார். அப்போது முதலை இருக்கும் ஓடையில் அந்த பெண் தவறி விழுந்து விட்டார்.
 
முதலை அவரது காலை கடித்து விட்டது. கடுமையான போராட்டத்திற்கு பின் அந்த பெண் காப்பற்றப்பட்டார். பின்னர் அந்த பெண்ணுக்கு மருத்துவ குழு சிகிச்சை அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
செல்ஃபி அனைவரிடம் உள்ள வழக்கமான செயலாக மாறிவிட்டது. இதனால் சிலர் ஆபத்துகள் நிறைந்த பகுதிகளில் செல்ஃபி எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை ஒரு சவாலகவும், பெருமையாக கருதுகின்றனர். இதனால் ஏற்படும் மரணம் அதிக அளவில் உயர்ந்துக் கொண்டே செல்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :