வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (09:35 IST)

ஊழல் செய்த ராணுவ தளபதி சுட்டுக் கொலை: வட கொரியா அதிரடி

வட கொரியாவில் ஊழல்  செய்த குற்றத்திற்காக ராணுவ தளபதி சுட்டுக் கொல்லப்பட்டார்.


 


வட கொரியாவில் ராணுவ தளபதியாக இருந்த ரி யாங் கில் அரசியலில் பிளவு ஏற்படுத்தியதுடன், ஊழலிலும் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கும் கிம் ஜாங் உன்  தலைமையிலான அரசு மரண தண்டனை விதித்தது. அதன்படி, அவர் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
வட கொரியாவில் உயர் பதவியில் இருப்பவர்கள் ஊழல் உள்ளிட்ட மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு மரண தண்டனையளிப்பதற்கு அந்நாட்டு அரசியல் சட்டம் இடமளிக்கிறது.
 
ஏகாதிபத்தியத்தையும் அமெரிக்காவையும் கடுமையாக எதிர்க்கும் நாடுகளுள் வடகொரியா முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.