Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நான் ஒரு ஏலியன்: நாசாவிற்கு வந்த அதிரடி கடிதம்!!


Sugapriya Prakash| Last Updated: சனி, 5 ஆகஸ்ட் 2017 (20:07 IST)
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வேலைக்கு ஆள் தேவை என்ற அறிவிப்பை அறிவித்திருந்தது. இதற்கு ஒரு அதிரடி கடிதம் ஒன்று பதில் விண்ணப்பம் ஒன்று வந்துள்ளது.

 
 
9 வயது நிரம்பிய நான்காம் கிரேட் படிக்கும் ஜாக் என்ற சிறுவன் இந்த பணிக்கு விண்ணப்பித்துள்ளான். அந்த சிறுவன் கடிதத்தில் பல விண்வெளித் திரைப்படங்களைக் கண்டிருக்கிறேன், மேலும் வீடியோ கேம்களில் சிறப்பாக விளையாடுவேன் என இந்த பணிக்கு விண்ணப்பித்துளான்.
 
தனது சொந்த கையெழுத்தில் நாசாவிற்கு கடிதம் எழுதியுள்ள ஜாக் அதில் தன்னை "கார்டியன் ஆப் தி கேலக்ஸி" என்றும் குறிப்பிட்டடுள்ளான். 
 
நான் ஒன்பது வயது சிறுவன் தான், ஆனால் நான் இந்த வேலைக்கு தகுதியுடையவன் என்று நினைக்கிறேன். "நான் ஒரு ஏலியன்" என்று என் சகோதரி கூறுவதும் அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக நினைக்கிறேன் என கூறியுள்ளார்.
 
இதில் சுவாரசியம் என்னவென்றால் ஜாக் அனுப்பிய கடிதத்திற்கு நாசா பதில் அனுப்பி வைத்துள்ளது என்பதுதான். 
 


இதில் மேலும் படிக்கவும் :