வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 24 அக்டோபர் 2017 (17:51 IST)

கிரங்களாக மாறும் வால் நட்சத்திரங்கள்: நாசா கண்டுபிடிப்பு!!

அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சக்தி வாய்ந்த அதிநவீன டெலஸ் கோப்புகளை ஹவாய் தீவில் நிறுவியுள்ளது.


 
 
இந்த டெலஸ் கோப் மூலம் விண்வெளியில் உலாவரும் புதிய கிரகங்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் வால் நட்சத்திரங்களின் உடைந்த நீள் வட்ட வளையங்கள் ஒன்றிணைந்து புதிய கிரகங்கள் உருவாவதாக கண்டறிந்துள்ளனர்.
 
உருவாகியிருக்கும் உருவம் பூமியை போன்று பல மடங்கு பெரிய அளவு கொண்டவை. நீள்வட்ட வளையங்கள் அதிக அளவில் கார்பன் மற்றும் பல்வேறு மூல கூறுகளால் ஆனது.
 
இந்த புதிய கிரங்கள் கூரிய மண்டலத்தைவிட்டு 3 மடங்கு தொலைவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.