'இரக்கமற்ற கும்பல்' தலைவி - சமூக வலைத்தளங்களில் மிரட்டும் கவர்ச்சிப் பதுமை


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 6 நவம்பர் 2014 (18:39 IST)
உலகின் மிக மோசமான தாக்குதலில் ஈடுபடும் கவர்ச்சிப் பதுமை சமூக வலைத்தளங்களில் மிரட்டி வருகிறார்.
 
போதைப் பொருள் கடத்தலில் புகழ் பெற்ற மெக்சிகோ நாட்டில் உள்ள போதை கும்பல்களில் ஒன்றின் தலைவியாக உள்ளவர் கிளாடியா ஒகோவா பெலிக்ஸ். கவர்ச்சிகரமான தோற்றம், ஆடம்பர வாழ்க்கை, எப்போதும் இயந்திரத் துப்பாக்கி பாதுகாப்புடன் வலம் வருகிறார்.
 
 
உலகின் மிகவும் இரக்கமற்ற கும்பல்களில் ஒன்றின் தலைவியான இவர், சமூக இணையதளத்தில்  உள்ளார். உலகின் மிக மோசமான இரக்கமற்ற தாக்குதல்களில் ஈடுபடும் 'லாஸ் ஆண்ட்ரக்ஸ்' கும்பலின் தலைவியாகி உள்ளார். இந்தக் கூட்டத்தின் மீது 100க்கும் மேற்பட்ட கொலைகள், கொடிய சனாலாவா எனப்படும் போதை மருந்து கடத்தல் வழக்குகள் உள்ளன.
 
இவர் தன்னுடைய ஒவ்வொரு அசைவுகளையும் படங்கள் மற்றும் தகவல்கள் மூலம் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். தனது சமூக வலைத்தளத்தில், 'உங்கள் அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைக்கிறேன், உங்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறேன். எனக்கு ஒரு விஷயம் மட்டும் போதும், நீங்கள் என்னை மரியாதையாக நடத்த வேண்டும்' எனக் கூறி உள்ளார்.
 

 
உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது "பெலிக்ஸ் ஒரு வழக்காமான அம்மாதான். ஆனால் இதே போல், எத்தனை அம்மாக்கள் துப்பாக்கி ஏந்தி உள்ளார்கள் எனத் தெரியவில்லை,  2006 முதல் மெக்சிகோவில் போதை கும்பலால் 1 லட்சத்தும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்" என்று தெரிவித்தார்.


இதில் மேலும் படிக்கவும் :