கிரெடிட் கார்டு கடன் தொல்லை. பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் முகத்தை மாற்றிய பெண்


sivalingam| Last Modified ஞாயிறு, 30 ஜூலை 2017 (23:03 IST)
கிரெடிட் கார்ட் மூலம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி பின்னர் அதை கட்ட முடியாத காரணத்தால் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தனது முகத்தையே மாற்றி கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


 
 
சீனாவை சேர்ந்த 59 வயது பெண் ஜூ நஜூவான் என்பவர் பல வங்கிகளில் கிரெடிட் கார்டு பெற்று அதன் மூலம் கடன் வாங்கி ஆடம்பரமாக செலவு செய்துள்ளார்.
 
ஆனால் கிரெடிட் கார்டில் வாங்கிய கடனை அவரால் கட்ட முடியவில்லை. கடன் வழங்கிய வங்கிகள் நெருக்குதல் தந்ததால் வேறு வழியின்றி கடன்காரர்களிடம் இருந்து தப்பிக்க தனது முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மாற்றிக்கொண்டார். இருப்பினும் அவரை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். 
 
ஜூ நஜூவான் போலவே சீனாவில் பலர் கிரெடிட் கார்டு வாங்கி பின்னர் கடனை கட்ட முடியாமல் திண்டாடுகின்றனர். எனவே கிரெடிட் கார்டை ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :