Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பொறுமையின் எல்லையில் சீனா; ராணுவத்துடன் தயார் நிலையில் இந்தியா


Abimukatheesh| Last Updated: வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (16:05 IST)
சிக்கிம் விவகாரத்தில், எங்களின் பொறுமை இறுதி நிலையில் உள்ளது என சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

 

 
சிக்கிம் எல்லை பகுதியில் இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லைப் பிரச்சனை குறித்த பேச்சு வார்த்தை நடந்த இரு நாடுகளும் முன்வரவில்லை. இரு நாடுகளும் எல்லை பகுதியில் ராணுவத்தை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இருநாடுகளும் ராணுவத்தை பின்வாங்கினால் தான் பேச்சு வார்த்தை என மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் கூறி வருகின்றனர்.
 
இந்நிலையில் சீன பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
 
சீனா ஆரம்பத்தில் இருந்தே மிகுந்த நல்லெண்ணத்தை கடைப்பிடித்து வருகிறது. தூதரக வாயிலாகவே எல்லை பிரச்சனையை தீர்க்க பேச்சுவார்த்தையை நாடியது. எங்களின் பொறுமை இறுதி நிலையில் உள்ளது என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :