Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

எல்லையில் சீன ராணுவம் போர் பயிற்சி


Abimukatheesh| Last Updated: திங்கள், 17 ஜூலை 2017 (12:10 IST)
அருணாச்சல் பிரதேச எல்லையில் சீன ராணுவம் போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.
 
 
 
சிக்கிம் பகுதியில் முச்சந்திப்பாக உள்ள டோக்லாமில் சீன ராணுவம் ஆக்கிரமிப்பில் ஈடுப்பட்டு உள்ளது. இதற்கு இந்தியா மற்றும் பூடான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்தியா சீனாவின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்தியுள்ளது.  
 
இதையடுத்து இந்தியா எல்லை பகுதியில் ராணுவ வீரர்களை அதிகரித்தது. எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். சீன, இந்திய தனது ராணுவத்தை எல்லை பகுதியில் இருந்து பின்வாங்க வேண்டும் இல்லையென்றால் மோசமான சூழலை சந்திக்க நிலவும் என்று எச்சரித்துள்ளது. 
 
ஆனால் இந்திய ராணுவம் மறுத்து எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து உள்ளது. இந்நிலையில் சீனா ராணுவம் அருணாச்சல பிரதேச எல்லையில் திபெத்திய பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த செய்தியை அந்நாட்டு ஊடகம் வெளியிட்டு உள்ளது.
 
சுமார் 11 மணி நேரம் இந்த போர் ஒத்திகை நடைப்பெற்றுள்ளது. ஆனால் இந்த போர் பயிற்சி எப்போது நடந்தது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.  


இதில் மேலும் படிக்கவும் :