1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (19:39 IST)

எதிர்மறை சக்தியாக கருதி மலைக்கு பெயிண்ட் அடித்த சீனர்

தனக்கு எதிர்மறை சக்தி கொடுப்பதாக கருதி 900 மீட்டர் உயர மலைக்கு 2000 சதுர மீட்டருக்கு மலைக்கு பெயிண்ட் அடித்துள்ளார் சீனர் ஒருவர்.
 
சீனாவின் சாங்கிங் நகரத்துக்கு அருகாமையில் உள்ள மலைப்பகுதியில் யாங் ஸிகேங் என்பவர் வசித்து வருகிறார். அவர் தனது வீட்டிற்கு அருகேயுள்ள மலைக்குன்றின் இயற்கையாக அமைந்த நிறம் தனக்கு எதிர்மறை சக்தி கொடுப்பதாகக் கருதியுள்ளார். 
 
இதனால், அவர் குன்றின் மீது ஐந்தாறு பேரை வைத்து வெளிர் பச்சை நிறத்தில் பணம் கொடுத்து பெயிண்ட் அடிக்க செய்திருக்கிறார். ஆபத்தான அந்த 900 மீட்டர் உயரமான குன்றுப் பகுதியின் மீது ஒரு வாரத்துக்கும் மேலாக வேலை செய்த அவர்கள், சுமார் 2000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு பெயிண்ட் அடித்துள்ளனர் என தெரியவந்துள்ளது. 
 
இந்த விவகாரத்தை அறிந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குன்றுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறதா என விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
ஒரு அடுக்கு பெயிண்ட்டிற்கு பிறகுதான் பெரிய மாற்றமாக, குன்று பார்க்க அழகாக இருக்கிறது என்று யாங் காமெடி கமெண்ட் அடிக்கிறார்.